Sunday, May 26, 2024

பொதுப் போக்குவரத்து வரலாறு

 

பொதுப் போக்குவரத்து வரலாறு

  • 1907 - கொழும்பிலிருந்து சிலாபம் வரையான முதலாவது பொதுப்​ போக்குவரத்து அறிமுகம்
  • 1940- ஒவ்வொரு வழிகளுக்குமான கட்டணத்தை குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் தீர்மானித்தார்.
  • 1958- மத்திய போக்குவரத்து சபை நிறுவப்பட்டது. ம.போ.ச. இன் கீழ் 2500 கம்பனி பேருந்துகள் செயல்பட்டன.
  • 1968- வழி விரிவாக்கப்பட்டது. அபிவிருத்தியடைந்த உற்பத்தித்திறன். புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • 1978- ஒன்பது பிரதேச சபைகள் நிறுவப்பட்டன. குறைந்த கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மோசமான முகாமைத்துவம். பெரும் இழப்பு மற்றும் அரசியல் தலையீடுகள்.
  • 1979- பிரதேச கம்பனிகளின் தோல்வி காரணமாக போக்குவரத்து துறையில் முதலீடு செய்வதற்கு தனியார் துறை அழைக்கப்பட்டது.
  • 1980- இயக்குநர்களின் விருப்பப்படி தெரிவுசெய்யப்பட்ட வழிகளில் 5000 தனியார் பேருந்துகள் பயணித்தன. இது பிரதேச பேருந்துகளுக்கு தீங்கு விளைவித்தது.
  • 1990- திறைசேரி மீதான சுமையைக் குறைப்பதை நோக்காகக் கொண்டு மக்கள் மயமாக்கப்பட்ட பேருந்து கம்பனி நிறுவப்பட்டது.
  • 1998- பேருந்து மனை நிலைகளில் மோசமான முகாமைத்துவம் காணப்பட்டமையால், மக்கள் மயமாக்கப்பட்ட பேருந்து கம்பனிகள் பிரதேச பேருந்து கம்பனிகளின் கீழ் ஒன்றுகூடின.
  • 1991- தேசிய போக்குவரத்து சபை மாகாணங்களுக்குள் பேருந்து சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அறிமுகப்படுத்தின மற்றும் 13 ஆம் சீர்த்திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கு பிரதேச போக்குவரத்து அதிகார சபைகளை நிறுவின.
  • தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வானது சொகுசுப் பேருந்துகளின் மூலமான பயணிகளின் போக்குவரத்துடன் தொடர்புடைய தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கும் சில பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கும் நிதியியல் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் நிறுவப்பட்டுள்ளது.  .

No comments:

Post a Comment

fire safety

Introduction to fire safety Most fires are preventable. Those responsible for workplaces and other buildings to which the public have access...