கற்றல் மற்றும் கற்பித்தலில் உள்ள புதிய அணுகுமுறைகள் யாவை?

 கற்றல் மற்றும் கற்பித்தலில் உள்ள புதிய அணுகுமுறைகள் யாவை?

கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய இரண்டிலும் பெரிய மாற்றங்கள் காலம் காலமாய் நிகழ்ந்து வருகின்றன. பழைய காலத்தில் கல்வி ஆசிரியரை மையமாகக் கொண்டு இருந்தது. பின்னர் கல்வி கற்பிக்கப்படுவது மாணவனுக்கு என்பதால் அவனுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து மாணவனை மையப்படுத்தி அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மாணவனை விட மாணவன் எப்படிக்கற்றுகொள்கிறான் என்பது தான் முக்கியம் என்று முடிவு செய்து கல்வி கற்றலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.


தற்சமயம் கற்றல் மையமான கல்வி முறையே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. இத்தகு சூழலில் பழைய நடைமுறை சிலவற்றில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.


லெக்சர் முறை முழுமையாக பல கற்றல் கற்பித்தல் சூழலில் வெற்றிகரமாக கைவிடப்பட்டுள்ளது


ஆசிரியர் அளிக்கும் விளக்கம் வேதமாக பல சூழல்களில் கருதப்படுவதில்லை. மாணவரே முயன்று அறிவுக்கூறுகளை கண்டறிய வேண்டும். அதற்கான உதவிகளை ஆசிரியர் பல யுக்திகளைப்பய்ன் படுத்திக் கற்பிக்க வேண்டும். எனவே கல்வி கிளிப்பிள்ளை கற்றுகொள்வதைப் போல் இல்லாமல் கண்டுபிடித்தல்கல்வியாக இருக்கவேண்டும் எனும் கருத்து மேலும் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

மனப்பாடம் செய்வது ஓரளவுக்கு அவசியம் என்றாலும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை டாஸ்க் ஓரியன்டெட் கல்வி என்ற பெயரில் பெரிய அளவில் ஆகிரியர்களால் முயற்சிக்கப்படுகிறது.அண்மையில் செயல்முறைக் கல்வி வழங்க கல்விக்கூடங்கள் பெரிய அளவில் முயற்கிகள் மேற்கொன்டு வருகின்றன.

கல்விச் சூழலில் பல்வகை மாற்றங்கள் : பாடமுறை மாற்றம், கற்பித்தல் முறையில் மாற்றம், தேர்வுமுறை மாற்றம், ஆசிரியப் பயிற்சிமுறையில் மாற்றம் முதலியவை கவனம் பெருகின்றன.

கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம், மொழிக்கு மொழி மாறக்கூடியதா?

1) கற்றலும் கற்பித்தலும் நாட்டுக்கு நாடு என்று மட்டுமல்ல, கலாச்சாரத்துக்குக் கலாச்சாரம் என்று கூட மாறுபடும். இனி இடத்துக்கு இடம் என்று மட்டுமல்ல, ஆண்களின் பள்ளி, பெண்களின் பள்ளி, கலவன் பள்ளி என்று கூட மாறுபடும். கற்பிப்பது தொழில் சார் கல்வியாக இருந்தால் கற்பிப்பவர் ஆசிரியரா அல்லது ஆசிரியையா என்பதில் கூடத் தங்கியுள்ளது. சிறுவர்களுக்குக் கற்பிக்கும்போது கற்பிக்கும் கருவி வெறும் “சாக்” கட்டிதானா அல்லது மேலதிகமாக ஏதேனும் கருவிகள் உண்டா என்பதிலும் தங்கியுள்ளது.

2) உங்களுடைய இரண்டாவது கருத்து வெறும் அபிப்பிராயமே ஒழிய ஆய்ந்தறிந்த உண்மையல்ல.

3) கற்பித்தலின் முக்கிய பாகம் செயன்முறைக்கல்வி. பள்ளியில் நாம் செய்வதானது ஒரு செயலை/பொருளை வெவ்வேறு விதங்களில் செய்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய பயிற்சிகளை உள்ளடக்கும். இல்லையென்றால் பிள்ள்களைப் பள்ளிக்கு அனுப்பாது நேரே தொழிற்சாலைக்கு அனுப்பலாம் அங்கே இன்னும் திறம்படப் பயிற்சி அளிப்பார்கள்.

4) புதிய செயற்பாட்டுப்பொருட்கள், புதிய நடைமுறைகள் இவை எல்லாம் கற்றலின் கீழ் வரவேண்டும் இல்லையேல் நாம் மாட்டுவண்டி மட்டும் தான் செய்துகொண்டிருப்போம். மோட்டார் வண்டி செய்ய மாட்டோம்

5) கல்வி என்பது மனத்தை விசாலிப்பதாக இருக்கவேண்டும். “இந்தக் கையால் பிடித்து இப்படித்தான் உழுந்து அரைiப்பது” என்று சொல்லிக்கொடுக்கப் பள்ளிகள் தேவையில்லை.






Comments