கற்றல் மற்றும் கற்பித்தலில் உள்ள புதிய அணுகுமுறைகள் யாவை? கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய இரண்டிலும் பெரிய மாற்றங்கள் காலம் காலமாய் நிகழ்ந்து வருகின்றன. பழைய காலத்தில் கல்வி ஆசிரியரை மையமாகக் கொண்டு இருந்தது. பின்னர் கல்வி கற்பிக்கப்படுவது மாணவனுக்கு என்பதால் அவனுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து மாணவனை மையப்படுத்தி அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மாணவனை விட மாணவன் எப்படிக்கற்றுகொள்கிறான் என்பது தான் முக்கியம் என்று முடிவு செய்து கல்வி கற்றலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. தற்சமயம் கற்றல் மையமான கல்வி முறையே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. இத்தகு சூழலில் பழைய நடைமுறை சிலவற்றில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. லெக்சர் முறை முழுமையாக பல கற்றல் கற்பித்தல் சூழலில் வெற்றிகரமாக கைவிடப்பட்டுள்ளது ஆசிரியர் அளிக்கும் விளக்கம் வேதமாக பல சூழல்களில் கருதப்படுவதில்லை. மாணவரே முயன்று அறிவுக்கூறுகளை கண்டறிய வேண்டும். அதற்கான உதவிகளை ஆசிரியர் பல யுக்திகளைப்பய்ன் படுத்திக் கற்பிக்க வேண்டும். எனவே கல்வி கிளிப்பிள்ளை கற்றுகொள்வதைப் போல் இல்லாமல் கண்டுபிடித்தல்கல்வியாக இருக்கவேண்டும் எனும் கருத...
IMPORTANT NEWS FROM LIFE