Skip to main content

அலெக்சாண்டர் அலெக்சாண்டர்



BucephalusPhiloneicus the Thessalian என்னும் குதிரை விற்பனையாளர் Alexander அப்பாவான King Philip II விடம் Bucephalus குதிரையை பரிசாக கொண்டு வந்தாராம். நல்ல உயரமாக, வலிமையாக, அழகாக, கருப்பாக சில இடங்களில் மட்டும் வெள்ளை திட்டுகளோடு இருந்த குதிரை


யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்ததாம். கடுப்பான ராஜா குதிரையை கொண்டு செல்லும்படி கட்டளையிட்டாராம். அப்போ அங்க வந்த இளம்வயது AlexanderBucephalus நிழலை கண்டு பயப்படுகிறது எனப் புரிந்துகொண்டு சூரியனை மறைத்தவாறு அதன் முன்னே நின்று தடவி கொடுத்தாராம்.

அமைதியான Bucephalus மேல் ஏறி அமர்ந்தாராம். அதை கண்டு ஊரே ஆச்சரியப்பட, 'அடே மகனே உனக்கு கீழ் Macedonia (Alexander நாடு) மட்டுமல்ல இந்த உலகமே வரப்போகிறது' என உச்சி முகர்ந்தாராம். அதன்பின்னர் 30 வருடங்கள் BucephalusAlexander இன் எல்லா போர் வெற்றிகளிலும் பங்கு பெற்று இருக்கிறது.

அலெக்சாண்டர் அந்த குதிரைக்கு புசெபெலஸ் என்று பெயரிட்டார். அலெக்சாந்தருடன் இணைந்து புசெபெலசு பல போர்களில் கலந்துகொண்டுள்ளது. இந்தக் குதிரை தான் மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணைக்கண்டம் வரை போர்களினூடே சுமந்து வந்தது.

கடைசியாக Hydaspes (அப்போதைய பஞ்சாப்) என்னும் இடத்தில் நடந்த சண்டையில் காயம் காரணமாக உயிர் நீத்தது. அந்த குதிரை உயிர் விட்ட ஊருக்கு Bucephala (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது) என்று பெயரிட்டார் Alexander.

கிமு 333ல்  ரத்தம் சிதறிய பெர்ஷிய படையெடுப்பை வெற்றியுடன் முடித்து கொண்டு, கழுகளுக்கும் நரிகளுக்கும் ஏராளமான மனித உடல்களை விட்டு அலெக்சாண்டர் தன் படையை கிழக்கு நோக்கி திருப்பியது, பொன் விளையும் பூமியான இந்தியாவின் வடமேற்கு கதவை தட்ட தான்.

இந்தியாவின் வடமேற்கு எல்லை வரை விரிந்திருந்தது முதலாம் டேரியஸின் சாம்ராஜ்யம்.


ஒக்சியார்டஸை தோற்கடித்து இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையே உள்ள சொக்டியோனா கோட்டையை கைப்பற்றிய அலெக்சாண்டர், இன்றைய பெஷாவாரை சேர்ந்த அன்றைய காந்தாரத்தின் குறுநில மன்னர்கள் அல்லது பாளையக்காரர்களை அழைத்து அவனது அதிகாரத்திற்கு கீழ்பணிய ஆணையிட்டான். அதை இந்து நதிக்கும் ஜீலம் நதிக்கும் இடையில் உள்ள நிலங்களை, இன்றைய ராவல்பிண்டியிலிருந்து (அன்றைய டக்சிலா) ஆட்சி செய்த அம்பியும் ஏற்றுக்கொண்டான் என்கிறார்கள் சில வரலாற்று ஆசிரியர்கள். எனினும் இதில் மாற்று கருத்துகள் உண்டு.

போரஸ் எனும் புருவுடன் தக்ஷஷீலாவின் அம்பிக்கு மிக பெரும் பகை நிலவி உள்ளது. தன பக்கத்தை பலப்படுத்த அம்பி சொக்டியோனாவிலிருந்த அலெக்சாண்டருக்கு தூது விட்டதாக தான் க்விண்டஸ் பதிந்துள்ளார்.


அலெக்சாண்டரின் துணைக்கண்ட போரெடுப்புகளுக்கு தலைமையகமாக டக்சிலா எனும் தக்ஷசீலம்  இயங்கியது.

இண்டசை கடந்து வந்த அலெக்சாண்டருக்கு காத்து கொண்டிருந்தது அம்பிகா என்னும் அம்பியின் படை. கடலென குவிந்திருந்த படையை கண்டு அலெக்சாண்டர் பிரமித்ததாக கூறுகிறார் அலெக்சாண்டரின் சரித்திரத்தை எழுதிய க்விண்டஸ் கர்ஷியஸ் ரபுஸ்.


க்விண்டஸின் கூற்றுப்படி அலெக்ஸாண்டர் தன் படைகளை ஒழுங்கு செய்ய துவங்க தக்ஷசீலத்தின் அம்பி பெரும் பரிசுகளுடன் அலெக்ஸாண்டரை சந்தித்ததாகவும், அலெக்ஸாண்டர் அப்பரிசுகளை திரும்ப தந்தது மட்டுமில்லாமல் அம்பிக்கு பெர்ஷிய பட்டாடைகளும் 30 குதிரைகளும் 25000 கிலோ தங்கத்தையும் கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதிலேயே பல சந்தேகங்கள் எழும்.
1. அம்பியின் அழைப்பை ஏற்று அலெக்ஸாண்டர் வந்திருந்தால் அலெக்ஸாண்டர் அம்பியின் படையை கண்டு ஏன் தன் படையை ஒழுங்கு படுத்த வேண்டும்.?
2.முதலில் அம்பி ஏன் தன் முழு படையுடன் வர வேண்டும்.?
3. அலெக்சாண்டரிடம் அம்பி சரணடைந்தால் அம்பிக்கு அலெக்சாண்டர் ஏன் கப்பம் கட்ட வேண்டும்? இதில் கவனிக்க வேண்டியது அலெக்ஸாண்டர் தன்  படையெடுப்புகளில் மிக கொடூரமாகவே நடந்து கொண்டிருக்கிறான். இதற்கு பெர்சிபோலிஸ் மற்றும் தேப்ஸில் நடந்த போருக்கு பின்னான கொள்ளைகளும் கொடூரங்களும் சான்று.
இந்நிகழ்ச்சியை பற்றி இன்னொரு கூற்று உள்ளது. அது அலெக்சாண்டர் அம்பியிடம் நட்பு கரம் நீட்டி பரிசளித்து அம்பியின் பரம எதிரியான புருஷோத்தமன் புருவின் மேல் போர் தொடுக்க உதவி நாடியுள்ளான். அதன் பிறகே அம்பி தன்  நிலத்தில் அலெக்சாண்டர் படைவீடு அமைக்க உதவியுள்ளான். மேலும் 5000 குதிரைபடையை தன்  இளவரசன் தலைமையில் பௌரவ அரசின் மேல் போர் தொடுத்த அலெக்சாண்டரின் படையுடன் இணைத்துள்ளான். மேலும் இப்பாயஷன் மற்றும் பெர்டிகஸ் என்னும் அலெக்சாண்டரின் இரு தளபதிகள் சிந்து நதியின் குறுக்கே படகுகளால் பாலம் அமைக்க அம்பி உதவியதாக வரலாற்று ஆசிரியர் அர்ரியன் தன் "ஆனபாசிஸ் அலெக்சாண்டரி"யில் குறிப்பிட்டுள்ளார்.

தன் படைகளை நேர் செய்துகொண்டு அலெக்ஸாண்டர் புருவிற்கு பணிந்து விடும் படி செய்தி அனுப்பினான். புருவிடம் வந்த பதில் நம் எல்லோருமே எதிர் பார்த்ததுதான்.

"களத்தில் சந்திப்போம், பணிதல் பழக்கமே இல்லை" என்பது தான்.
இந்தியாவை கண்ணில் கண்டுவிட்ட அலெக்ஸாண்டர் கனவுகளை கொன்று போட விரும்பவில்லை. 

கொய்நஸிடம் அலெக்ஸாண்டர் சிந்து நதியில் தாங்கள் கட்டிய படகுகளை பிரித்து வண்டிகளில் கொண்டுவருமாறு ஆணையிட்டான். கொய்நஸும் சிறிய படகுகளை இரு பாகங்களாகவும் 20 துடுப்பிடகூடிய பெரிய படகுகளை மூன்று பாகமாகவும் கொண்டுவந்து ஜீலம் கரையில் சேர்த்தான்.


அலெக்ஸாண்டர் தன் படையில் உடல்நலம் குன்றியவர்களை தக்ஷஷீலத்திலேயே விட்டுவிட்டு சோர்ந்த படைவீரர்களை வீடு திரும்ப அனுப்பிவிட்டு. தேர்ந்த போர்வீரர்களை மட்டும் சேர்த்துக்கொண்டு கிளம்பினான்.  

அலெக்சாண்டரின் படை ஆரவாரத்துடன் 100 மைல் தாண்டி இருந்த ஜீலம் நதியை நோக்கி புறப்பட்டது.


கிமு 326, கிரேக்க மாதம் க்விண்டிளிஸ் எனும் இன்றைய ஜூலை மாதத்தில்  சுமார் 40,000 காலாட்படை, சுமார் 10000 வரையான குதிரை படையுடன் (இதில் தக்ஷசீல 5000 குதிரைகள் அடக்கமில்லை) பெர்ஷியாவின் குதிரை வில்லாளிகள் (எண்ணிக்கை அறியவில்லை குறைந்தது 1000 இருக்கும்) மற்றும் அடிமைகள், வேசிகள், அரவாணியர்கள், இசை கலைஞர்கள், கட்டிட கலைஞர்கள் இத்தியாதிகள் என்று குறைந்தது 1,60,000 ஆட்களுடன் மேசிடோனியாவின் அலெக்சாண்டர் ஜீலம் நதியின் வடக்கு கரையில் வந்து படைவீடு அமைக்கிறான்.


அலெக்சாண்டரின் வருகை அறிந்த ஜீலம் நதியின் தெற்கே பௌரவ வம்ச அரசன் புருஷோத்தமன் புரு 20,000 காலாற்படை,3000 குதிரை படை, 300 தேர்ந்த போர் யானைகள் மற்றும் 300 போர் ரதங்களுடன் காத்திருக்கிறான்.
புருவை பற்றி கொஞ்சம் பார்த்துவிட்டு வருவோம்.
ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள புரு வம்சாவளி தான் பௌரவ மன்னன் புருஷோத்தமன் புரு என்கிறார் இந்திய வரலாற்றாசிரியர் தாமோதர் தர்மானந்த கோசாம்பி. புரு பாரத வம்சத்தின் கிளை. புருஷோத்தமன் குறைந்தது ஏழடி உயரமும் அதற்கேற்ற திடகாத்திரமும் உடையவன்.இவன் பெரும் யானையின் மேல் அமர்ந்திருப்பது சாதாரண மனிதர்கள் குதிரையின் மேல் அமர்ந்திருப்பது போல இருக்கும் என்கிறார் அர்ரியன். இவன் ஜீலம் நதியின் கிழக்கு மற்றும் தெற்கு கரை பகுதி துவங்கி அதன் பின் உள்ள நிலங்களை செனாப் நதிக்கரை வரை ஆட்சி செய்து வந்த மன்னன். மேலும் இவன் சத்திரிய தர்மமான "தர்மயுத்த" போர் முறையை கடைபிடிப்பவன்.
அலெக்ஸாண்டரின் படைக்கும் புருவின் படைக்கும் இடையே ஒரு மைல் அகலத்திற்கும் ஆழத்திற்கும் பெரும் பாய்ச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது ஜீலம் நதி. இன்னும் சில வாரங்களில் பருவமழை துவக்கம் உள்ளது என புரு அறிவான். அப்பருவ மழை ஜீலத்தின் ஆழத்தையும் அகலத்தையும் வேகத்தையும் இன்னும் பன்மடங்கு கூட்டும் என அறிந்தே இருந்தான் புரு. அலெக்ஸாண்டர் நதியை கடந்து வந்தால் கரையிலேயே அலெக்ஸாண்டருக்கு தக்க வரவேற்பு கொடுத்து அனுப்ப ஏதுவாக நின்றான் புரு. புருவை பற்றி ஏற்கனவே நன்கு விசாரித்து வைத்திருந்த அலெக்சாண்டர் எதிர் கரையில் வந்து நின்ற எதிரியை நோட்டம் விட்ட பின், இந்நதியை கடந்து சென்று புருவை சந்திப்பது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்பதை நன்கே உணர்ந்திருந்தான்.
அர்ரியன் பார்வையில் அலெக்ஸாண்டரே கண்டு வியந்த படையை உடைய அம்பியே அசைக்க இயலாத புருவிடம் அலெக்ஸாண்டரை விட குறைந்த படையே உள்ளது எனும் போதே புருவின் வீரம் புரிந்திருக்கும் அலெக்ஸாண்டருக்கு. எப்போதும் போல அலெக்சாண்டரின் குள்ளநரித்தனம் வேலை செய்ய துவங்கியது. அலெக்சாண்டர் போன்ற இராணுவ நிபுணர்கள் உலகில் குறைவு. கௌகமேலா யுத்தத்தில், மூன்றாம் டேரியஸின் 2,50,000 படையை 47,000 எண்ணிக்கையை கொண்ட படையை கொண்டு நொறுக்கி தள்ளிய அவனுடைய 160 கோண திருப்பம் மிக பிரசித்தி பெற்றது. எதிரி படைகளை பிரித்து ஆளும் மதிநுட்ப கலை அவனிடம் அபரீதம்.அலெக்ஸாண்டரை மாவீரன் என்று உலகு கொண்டாடியதற்கு காரணம் அவனின் தொடர் வெற்றிகள் மட்டுமில்லை அது அவனின் மதிநுட்ப போர்த்திறனும் கூடத்தான். ஒரு காய்ச்சிய இரும்பை அடிக்கும் ரீதியில் தான் அவன் எதிரியை குலைப்பான். முன்னிலிருந்து தாக்குதலை துவங்கும் அவன் சுற்றிவளைத்து எதிரியை பின்னிலிருந்தும் அடிக்க எதிரி குலைந்து போவான். இதே முறையில் தான் மூன்றாம் டேரியஸை கௌகமேளாவில் வீழ்த்தினான் அலெக்ஸாண்டர்.
பெரும் யானைகளை முன்னணியில் கொண்டிருந்த புருவை அத்தனை எளிதில் நதிமுகமாக போய் வென்றுவிட இயலாது என அலெக்சாண்டார் திண்ணமாக நம்பினான். யானைகளின் பிளிரல்களிலேயே குதிரைகள் சிதைந்து ஓடிவிடும். மேலும் இத்தனை பெரும் படையை மரக்கலம் மூலம் நதியை கடந்து போவதென்பது ஆகாத காரியமென நன்கே அறிந்திருந்தான். யானையை கண்டதுமே குதிரைகள் நதிக்குள் தாவிவிடும். மேலும் தன் இருமுனை தாக்குதல் தந்திரம் நேரடி போரில் எடுபடாது. நதிக்கரையை நெருங்கும் போதே வீரமிகு புரு தன் மொத்தபடையை ஜலசமாதி ஆக்கிவிடுவான் என அஞ்சினான்.
அதற்காக அலெக்ஸாண்டர் செய்த சூழ்ச்சி வேறு. அவன் மூலையில் வேறு ஒரு திட்டம் உதித்தது.
அலெக்ஸாண்டரிடம் ஒன்பது தளபதிகள் இருந்தனர்.

  • கரேடரஸ்
  • கொய்நஸ்
  • இப்பாயஷன்
  • ப்டோலெமி
  • பெர்டிகஸ்
  • செல்யூகஸ்
  • லைசிமேகொஸ்
  • டேமொநிகஸ் மற்றும்
  • ப்யூசெஸ்டாஸ்.
இவர்களுக்கு அலெக்சாண்டர் கொடுத்த ஆணை, "வெறுமனே தயார் படுத்தி கொண்டிருங்கள் படையை. எதிரிக்கு நாம் நதியை கடக்க ஏதுவாகிறோம் என புரியவேண்டும்" இவ்வாணையை செவ்வனே செய்தார்கள் படை தளபதிகள்.
நதியின் மேலுக்கும் கீழுக்குமாக மேசடோநியர்கள் படையை நகர்த்தி கொண்டிருந்தார்கள்.
புருவும் நதியை அலெக்ஸாண்டர் கடக்க கூடும் எனும் இடங்களுக்கு சிறு சிறு படைகளை அனுப்பி வைத்திருந்தான்.

ஆனால் அலெக்ஸாண்டரின் எண்ணம் வேறாக இருந்தது. பனிக்காலம் வரை காத்திருக்க முடிவு செய்தான். காரணம் சிந்து நதி பனிக்காலங்களில் வடக்கே உறைந்து போவதால் நதியில் நீர் வரத்து குறையும் அப்போது நதி மிக சுருங்கி காணப்படும். இந்த தருணத்தில் நதியை கடந்து புருவை எதிர்க்கொள்ள போகிறேன் என்று அலெக்சாண்டர் தன் தளபதிகளிடம் கூறினாலும், அவன் மனதில் வேறு எண்ணங்கள் இருந்தது. பனிக்காலம் வரை காத்திருக்க அலெக்ஸாண்டரின் துருதுருப்பு இடம் தரவில்லை.


அலெக்ஸாண்டரின் கூடாரங்களில் கேளிக்கையும் கூத்துமாக இருந்தது. இரவுகள் முழுதும் ஆட்டம் பாட்டமென ரகளையாக அமர்களப்பட்டது.


இரவில் பல நேரங்களில் அலெக்ஸாண்டரின் படைகள் பெரும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு நதியை கடப்பது போல அங்கும் நகரும் . கிரேக்க போர் கடவுள் இன்யாளியஸின் போர்கூவல்களை கூவுவார்கள். இப்பேரொலிகளுக்கு இடையே அலெக்ஸாண்டர் அவ்வொலிகளின் எதிர் திசையில் தன படையை நகர்த்த பழக்கபடுத்தி இருந்தான். 


இரண்டு மாதங்களாகியும் எந்த கடக்கும் முயற்சியும் நடை பெறாதது புருவிற்கு அலெக்ஸாண்டரை பற்றிய ஒரு அசட்டையை ஏற்பட செய்தது. புரு தன் கவனத்தை கொஞ்சம் தளர்த்தி கொண்டான். அங்குமிங்குமாக தான் அனுப்பிய கண்காணிப்பு படைகளை திருப்பி அழைத்து கொண்டான் புரு. இதை தான் அலெக்ஸாண்டரும் எதிர் பார்த்தான்.  


இதற்கிடையில் அலெக்சாண்டர் தன் ஒற்றர்கள் மூலம் நதி எங்கே மெலிந்துள்ளது என கண்டறிய அனுப்பினான். இரவுகளில் ஜீலத்தின் கரையை அளந்த ஒற்றர்கள் அலெக்சாண்டருக்கு ஒரு இடத்தை காட்டினர். அலெக்சாண்டர் அவ்விடத்தில் குறும்பாக சிரித்திருக்க வேண்டும், காரணம் கடலை போல ஆர்ப்பரிக்கும் ஜீலம் நதி ஓரிடத்தில் அலெக்சாண்டரை அக்கறைக்கு வரவேற்க ஏதுவாக  மெலிந்திருந்தது. மேலும் மக்கள் நடமாட்டமில்லாத இடமான அது காடுகளால் சூழப்பட்டிருந்தது. அது அலெக்ஸாண்டரின் சூழ்ச்சிக்கு சிறந்த மறைப்பை தரும். அவ்விடம் புரு படைவீடு அமைத்து காத்துக்கொண்டிருந்த இடத்திற்கு வடகிழக்கே நதிஒட்டதின் எதிர் திசையில் கிரேக்கத்தில் 150 ஸ்டேடுகள் தொலைவிலிருந்தது (ஒரு ஸ்டேட் 180 மீட்டர்கள்) சுமாராக 27 கிலோமீட்டர்கள். அலெக்ஸாண்டர் எதிர்பார்த்தது இப்படி ஒரு கடவையை தான். ஆனால் ஜீலம் நதி அலெக்ஸாண்டரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அது அலெக்ஸாண்டருக்கு சில அதிர்ச்சிகளை வைத்திருந்தது.


அலெக்சாண்டர் க்றேடரசின் தலைமையில் ஒரு படையை தான் முகாமிட்டிருந்த அதே இடத்தில் நிறுத்தினான். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை இரவு முழுதும் நதியை கடக்க முயற்சிப்பதும் பெரும் ஒலிகளை எழுப்புவதும் ஆகும். அது புருவிற்கு முழுபடையும் அங்கேயே இருப்பதுபோன்ற தோற்றத்தை அளிக்கும். மேலும் அலெக்சாண்டருடன் வந்த இதர போர் வீரர்கள் இல்லாத குழுக்கள் பெரிய படை அங்கிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும். பெரிய அளவிலான முகாம் தீக்கள் அதை மேலும் வலியுறுத்தும். க்றேடரசுக்கு அலெக்சாண்டர் தன் திட்டத்தை தெளிவாக விளக்கி இருந்தான். 


அது, ஒரு போதும் புருவின் சந்தேகங்களை தூண்ட கூடாது அலெக்சாண்டர் தன் வலுவாய்ந்த படையுடன் நதியை தாண்டும் வரை. ஆனால் நதியை கடந்ததும் எப்படியும் புரு அறிந்து கொள்வான். எனினும் புருவிற்கு அலெக்சாண்டர் ஒரு முன் பிரிவு படையை அனுப்பியது போலதான் தோன்றவேண்டும். அப்போது புரு ஒரு சிறிய படையை தான் தன்முன் பிரிவு படையை சந்திக்க அனுப்புவான். புருவின் சிறுபடை அலெக்ஸாண்டரின் முழு படையை சந்திக்கும் போது, முதல் யுத்தத்திலேயே புருவின் கணிசமான படை நொறுக்கப்படும். இது புருவின் பலத்தை குறைக்கும். மேலும் நேரடி போர் துவங்கியதும், புரு ஆற்றின் அப்புறம் உள்ள படையை சந்திக்க தன் படையை பிரித்து கரையில் நிறுத்துவான். அது மேலும் அவன் படை பலத்தை பிரிக்கும். முழு வீச்சில் போர் துவங்கியதும் க்றேடரஸ் தன் படையுடன் ஆற்றை கடந்து வந்து இணைய வேண்டும். இப்போது புருவின் அச்சுறுத்தும் யானைகள் கரையில் இருக்காது. இது தான் திட்டம்.


  • அலெக்ஸாண்டர் படை: 
  • கொய்நஸ், இப்பாயஷன், டெமிட்ரியஸ் தலைமையில் பாக்டரியா, ஸ்கித்தியா மற்றும் சொக்டியோனாவின் குதிரை படை
  • டானின் குதிரை விற்படை, 
  • கிளிட்டஸ் மற்றும் கொயினஸின் தலைமையில் மேசிடோநியாவின் பிரசித்தி பெற்ற ஈட்டி படை (இதை பற்றி பின்னால் பேசுவோம்) மற்றும் 
  • அக்ரியானியர்களின் விற்படை.

இப்படையுடன் ஒரு மழை இரவில் இருட்டை பயன்படுத்தி கொண்டு அலெக்ஸாண்டர் ஜீலம் நதியின் அந்த மெலிந்த பகுதியை நோக்கி நகர்ந்தான்.


அந்த இரவில் ஒரே நாளில் அலெக்ஸாண்டர் சுமார் 30,000 முதல் 35,000 போர்வீரர்கள் மற்றும் 8000 குதிரைகள் படையையும் பெரும் படகுகள் ஏற்றபட்ட பாரவண்டிகளையும் நகர்த்தி கொண்டு புருவின் கண்ணில் படாமல் நகர்ந்திருக்க வாய்ப்பில்லை. முதலில் அத்தனை பெரும் படை நகர்ந்தாலே பெரும் ஓசைகள் எழும்பும். மேலும் குதிரைப்படை போகும் வேகத்திற்கு காலாட்படை ஈடு கொடுக்க இயலாது என்பதால் குதிரைகள் தான் காலாட்களுக்கு ஈடு கொடுக்க வேண்டும். அப்படியானால் ஒரு போர்வீரனின் க்விக் மார்ச் எனும் வேகநடை மணிக்கு 5.4 கிமீ தான். இதே கதியில் 27 கிலோமீட்டரை கடக்க 5 மணிநேரம் ஆகும் அங்கே சென்று படகுகளை கட்டி முடித்து ஆற்றைக்கடக்க இரண்டு முழுநாட்கள் ஆகும். ஆக, அலெக்சாண்டர் ஒவ்வொருவர் தலைமையிலும் படையை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி இருக்க வேண்டும். படகுகளும் ஏற்கனவே அங்கே கட்டபட்டிருக்க வேண்டும். அலெக்ஸாண்டர் கடக்க திட்டமிட்டிருந்த அந்த நதி வளைவில் காடு மண்டி இருந்ததாக குறிப்பிருக்கிறது. ஆகையால் படகுகளும் ஓரளவு படையும் அங்கே தேர்கனவே காட்டின் மறைவில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவும் புருவின் ஒற்றர் கண்களில் மண்ணை தூவிவிட்டு செய்தாக வேண்டும். 


க்விண்டிளிஸ் எனும் ஜூலை மாதம் பகல் நீண்டதாக தான் இருக்கும். ஆக அலெக்சாண்டர் சுமார் இரவு 7 மணிக்கு மேல் தான் கிளம்பி இருக்க வேண்டும். கடக்க முடிவு செய்த இடத்தை அலெக்சாண்டர் இரவு 12 மணிக்கு முன் அடைந்திருக்க வாய்ப்புகள் குறைவு. கடும் மழையின் ஒலியின் மறைவில் அலெக்சாண்டர் தன் படையை நகர்த்திக்கொண்டு நதியை கடக்கும் இடத்திற்கு போய் சேர்ந்திருப்பான்.  

அலெக்சாண்டரிடம் அதிகம் நேரம் இருக்க வாய்ப்பில்லை. விடியலுக்கு முன் கரையை கடந்தால் மட்டுமே புருவிற்கு அலெக்சாண்டர் வைத்திருந்த அதிர்ச்சி வைத்தியம் எடுபடும்.

முப்பது துடுப்புகள் இடும் படுகுகளில் சில பகுதி படைகள் ஏறின. அலெக்சாண்டருடன் ப்டோலமி, லைசிமாக்பஸ், பெர்டிகஸ், செல்யூகஸ், அலெக்சாண்டரின் ஹிடோய்ராய் என்னும் தற்காப்பு குதிரைப்படை மற்றும் கேடைய வீரர்கள் தனி படகில் பயணித்தனர். ஆட்டின் தோலில் வைக்கோல் அடைத்து அதை ஒரு மிதவையாக்கி அதை பிடித்து நீந்தியபடி பெரும்பாலான காலாற்படைகளும் ஜீலம் நதியின் அந்த மெலிந்த வளைவை கடந்தனர். நதியை கடந்து கரையேறி படையை சீர் செய்து நடந்தவர்களுக்கு ஜீலம்  வைத்திருந்த அதிர்ச்சி, அவர்கள் நதியை முழுதும் கடக்கவில்லை அது வெறும் நதியின் குறுக்கே உள்ள ஒரு தீவு என்பது. கிட்டத்தட்ட முக்கால் கிலோமீட்டர் அகல தீவது. இந்த அதிர்ச்சியை எதிர்பார்க்காத அலெக்சாண்டர் அதை கண்டு மலைக்கவில்லை. துரிதமாக அடுத்த வேளையில் இறங்கினான். அது இந்த தீவிலிருந்து அடுத்த கரைக்கு போக ஆழமில்லாத பகுதி எதுவென கண்டறியப்பட்ட ஆணைதான் அது. வெகு விரைவில் குதிரைகளின் கழுத்தாழமுள்ள இடத்தை அலெக்சாண்டர் கண்டுக்கொள்ளும் போது விடியலுக்கு இன்னும் சற்று நேரம் தான் பாக்கி இருக்க வாய்ப்பிருந்தது. குதிரைப்படை குதிரை மேலேயே அமர்ந்து கரையை கடக்க, அந்த படையை பின்பற்றியே ஆட்டுத்தோல் தக்கைகளில் மற்றவர்கள் கரையை கடந்தனர்.  இங்கே அலெக்சாண்டர் தம் கொண்டுவந்த முன்படையில் முழுப்படையையும் கடத்தி செல்லவில்லை. இவற்றின் நடுவே நாம் கவனிக்க வேண்டியது ஜீலம் நதி கொட்டும் மழையில் வெள்ள பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது என்பது. 





இந்த வகையில் அலெக்சாண்டரின் படைகலன்களை கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம். அலெக்சாண்டர் களத்தில் புருவை சந்திக்க வந்த போது அவனிடம் இருவகையான படைகள் தான் இருந்தது ஒன்று குதிரை படை மற்றொன்று காலாட்படை. மாசிடோனியாவின் குதிரை படை கேடையங்கள் கொண்டிருக்காது. இவர்கள் "கோபிஸ்" எனும் வகை மூன்றடி நீள குருவாட்களை நெருக்கமான போருக்கும் "ஸைஸ்ட்டன்" எனும் 13 அடி நீள ஈட்டியை நடுத்தொலைவு போருக்கும் உபயோகிப்பர். இவர்கள் "கூய்ராஸ்" எனும் வெண்கல உடற்கவசமும் பையோஷியன் வெண்கல தலைக்கவசமும் அணிந்திருப்பார்கள். இவர்கள் தான் முதல் தாக்குதலை துவங்குபவர்கள்.



இதில்லாமல் பெர்ஷியாவின் படையெடுப்பில் அலெக்சாண்டருக்கு அதிகம் தொந்தரவு கொடுத்தது குதிரை வில்லாளிகள் தான். இவர்கள் ஈரானிய பழங்குடியினர். இவர்கள் ஸ்கித்தியன் வில் எனும் இலகுரக ஆனால் கடினமான விற்களை தாங்கி குதிரையிலிருந்து புயல் போல் எதிரியின் முன்னணியை தாக்குவார்கள். வெகு வேகமாக நகரும் இவர்களின் குறியை யாரும் அனுமானிக்க இயலாதது இவர்களின் பெரிய பலம். இவற்றின் தாக்கும் தொலைவு 500 மீட்டர்கள் வரை.


ஒரு குதிரை வில்லாளி சுமார் 120 அம்புகளை தாங்கி போர்க்களத்தில் புகுவான். 1000 வில்லாளிகள் 1,20,000 அம்புகளுடன் போர்க்களத்தில் எதிரியின் படையை வட்டமிட்டபடி  500 மீட்டர் தொலைவிலிருந்தே தாக்கும் போது எதிரியின் கட்டுகோப்பு குலைந்து சிதறிவிடும். அலெக்சாண்டரிடம் இக்குதிரை வில்லாளிகள் சுமார் 1000 பேர் இருந்தனர் அவன் ஜீலம் நதியின் தெற்கு கரை ஏறும்போது. 


அடுத்து மேசிடோநியாவின் கனரக காலாட்படை அல்லது சிறப்பு ஈட்டிப்படை.

மேசிடோநியாவின் ஒவ்வொரு படைவீரனும் சரிஸ்ஸா எனும் 18 அடிகள் கொண்ட இருமுனை ஈட்டி, இந்த ஈட்டி உடைந்தாலும் கையிலுள்ள பாதி ஈட்டியும் ஆயுதமாக பயன்படும் வகையில் இரு முனையிலும் ஈட்டி இலைகள் இருக்கும். மேலும் இருமுனையின் தலையாய பங்கு சரியான சமநிலை நிறுவில் இருக்கும், ஆதலால் இலகுவாக போரில் பயன்படும். இவர்களின் கேடயங்கள் 64 முதல் 72 சென்டிமீட்டர் கொண்ட வட்டமான குவிந்த கேடையங்கள். இவை வெளியில் வெண்கலத்தாலும் உள்ளே மரக்கட்டை மற்றும் தோலாலும் ஆனவை. மேலும் இவர்கள் கோபிஸ் எனும் மூன்றடி வாளையும் நெருக்கபோர்காக வைத்திருப்பார்கள். 

இவர்கள் 16 பேர் கொண்ட பத்திகள் மற்றும் 16 வரிகளில், மொத்தம் 256 வீரர்களால்  ஆனா படைபிரிவுகளை கொண்டவர்கள். இது ஒரு உடைக்கவியலா அசாத்திய கோட்டை. முதலில் உள்ள பதினாறு பெரும் தங்கள் 18 அடி ஈட்டியை நீட்டி பிடித்திருக்க அடுத்த வரியுள்ளவர்களும் முதல் 16 பேருக்கு இடையே உள்ள இடத்தில் தங்கள் ஈட்டியை நீட்டி பிடித்திருப்பார்கள். வரும் எதிரி குறைந்தது 12 அடிகள் முன்னேயே கூர் ஈட்டிகளை சந்திக்க வேண்டும் மேலும் அவர்கள் அவ்வீட்டிகளை சமாளித்து முன்னேறினாலும் அடுத்து மூன்றாம் அடியில் அடுத்து வரிசை ஈட்டிகள் காத்திருக்கும். இப்படி ஒவ்வொரு வரி விழுந்தாலும் தொடர்ந்து 16 வரிகள் எதிரியை அசரவைக்கும். இந்த அமைப்பை சின்டேக்மா அல்லது ஸ்பீரா என்பார்கள் கிரேக்கர்கள்.







 புருவிடம் அலெக்சாண்டர் பொன்னையும் வெள்ளியையும் தாண்டி இரும்பை தான் பரிசாக எதிர்பார்த்தான் என்று அர்ரியனின் ஒரு குறிப்பு இருக்கிறது. 

Comments

Popular posts from this blog

எது சிறந்த வாட்ஸ்அப்? ஏன்? Which one is a better app, YoWhatsApp, GBWhatsApp, FMWhatsApp or WhatsApp? Why?

எது சிறந்த வாட்ஸ்அப்?  Which one is a better app,  YoWhatsApp, GBWhatsApp, FMWhatsApp or WhatsApp?  ஆரம்பத்தில் நான் ஜிபி வாட்ஸ்அப்பை பரிந்துரைக்கப் பயன்படுத்தப்பட்டேன், ஆனால் புதிய புதுப்பிப்புக்குப் பிறகு அதாவது. வி 7.81, திகாரப்பூர்வ வாட்ஸ்அப் நல்லது என்று கூறுவேன்.

COMPUTER GAMES AND ANDROID GAMES

COMPUTER GAMES    கணினி விளையாட்டுகள்   பற்றிய ஒரு அலசல் கணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை வன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற பரவலான நம்பிக்கையை மறுத்துள்ளனர் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள். ஆக்ஸ்ஃபர்ட் (Oxford), கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 1,000 இளையர்களிடமும் அவர்களுடைய பெற்றோரிடமும் நடத்திய ஆய்வின் முடிவு இது. எவ்வளவு நேரம் கணினி விளையாட்டுகள் விளையாடுகிறார்கள், எத்தகைய கணினி விளையாட்டுகளை அவர்கள் விளையாடுகிறார்கள் என்ற கேள்விகளுக்குப் பதின்ம வயதினர் பதிலளித்தனர். கணினி விளையாட்டுகள் விளையாடுவதால் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் கூடுதல் வன்முறை தென்படுகின்றதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. பெற்றோரும் பிள்ளைகளும் வழங்கிய பதில்கள், வன்முறையான விளையாட்டுகளுக்கும் வன்முறைப் பழக்கவழக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதைப் புலப்படுத்தவில்லை என்றனர் ஆய்வாளர்கள் கணினியின் தொழில்நுட்பம் வளர்சியடைந்தத...

Surveying civil engineering

  Surveying  civil engineering Surveying , a means of making relatively large-scale, accurate measurements of the Earth’s surfaces. It includes the determination of the  measurement  data, the reduction and interpretation of the data to usable form, and, conversely, the establishment of relative position and size according to given measurement requirements. Thus, surveying has two similar but opposite functions: (1) the determination of existing relative horizontal and vertical position, such as that used for the process of  mapping , and (2) the establishment of marks to control  construction  or to indicate land boundaries. Surveying has been an essential element in the development of the human  environment  for so many centuries that its importance is often forgotten. It is an  imperative  requirement in the planning and execution of nearly every form of construction. Surveying was essential at the dawn of history, and some of th...