Skip to main content

Posts

Showing posts from 2022

அலெக்சாண்டர் அலெக்சாண்டர்

Bucephalus .  Philoneicus the Thessalian  என்னும் குதிரை விற்பனையாளர்  Alexander  அப்பாவான  King Philip II  விடம்  Bucephalus  குதிரையை பரிசாக கொண்டு வந்தாராம். நல்ல உயரமாக, வலிமையாக, அழகாக, கருப்பாக சில இடங்களில் மட்டும் வெள்ளை திட்டுகளோடு இருந்த குதிரை யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்ததாம். கடுப்பான ராஜா குதிரையை கொண்டு செல்லும்படி கட்டளையிட்டாராம். அப்போ அங்க வந்த இளம்வயது  Alexander ,  Bucephalus  நிழலை கண்டு பயப்படுகிறது எனப் புரிந்துகொண்டு சூரியனை மறைத்தவாறு அதன் முன்னே நின்று தடவி கொடுத்தாராம். அமைதியான  Bucephalus  மேல் ஏறி அமர்ந்தாராம். அதை கண்டு ஊரே ஆச்சரியப்பட, 'அடே மகனே உனக்கு கீழ்  Macedonia  ( Alexander  நாடு) மட்டுமல்ல இந்த உலகமே வரப்போகிறது' என உச்சி முகர்ந்தாராம். அதன்பின்னர்  30  வருடங்கள்  Bucephalus ,  Alexander  இன் எல்லா போர் வெற்றிகளிலும் பங்கு பெற்று இருக்கிறது. அலெக்சாண்டர்  அந்த குதிரைக்கு புசெபெலஸ் என்று பெயரிட்டார். அலெக்சாந்தருடன் இணைந்து புசெபெலச...