TYPE OF CONSTRUCTION TAMIL

construction 

                              கட்டுமானம்

  1. கட்டிடக் கட்டுமானம்
  2. கனரகக் கட்டுமானம்
  3. தொழிற்துறை கட்டுமானம்




 நவீன முறைகள்

கட்டிடக்கலை துறையில் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT), உள்ளார்ந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, ஆற்றல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் இயக்கம் மற்றும் மேலாண்மை நடவடிக்கை ஆகிய நிலைகளில் தானியங்கி கட்டுமான தொழில்நுட்ப முறைகள் உலகளாவிய அளவில் பரவலான பயன்பாட்டில் இருந்து வருவது அறியப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டு பிரிவுகள் ஆகியவற்றில் கட்டிடக்கலை நிபுணர்களின் அவசியம் அதிகரித்து வருகிறது

‘அக்ரிடெக்சர்’ தொழில்நுட்பம்

ஆர்க்கிடெக்சர் மற்றும் அக்ரிகல்சர் ஆகிய இரு வெவ்வேறு துறைகள் ஒன்றிணைந்த புதிய அணுகுமுறையாக அக்ரிடெக்சர் (Agritecture) உள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுடன் மரம், செடி மற்றும் கொடிகள் வளர்ப்பு முறைகளுக்கு ஒருங்கிணைந்த திட்டமாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில் பசுமை கட்டமைப்புகள் அமைப்பதற்கு ஏற்ற சாத்தியக்கூறாகவும் இந்த முறை நிபுணர்களால் கவனிக்கப்படுகிறது. குறைந்த இடப்பரப்புகளில் தோட்டம் மற்றும் உணவுப்பயிர் சாகுபடிக்கு இந்த முறை வழிகாட்டுகிறது. செங்குத்து தோட்டம் (Vertical Garden) மற்றும் ‘வேஸ்ட் வாட்டர் மேனேஜ்மெண்டு’ ஆகியவற்றில் இந்த முறையை பயன்படுத்தி பல நன்மைகளை பெற இயலும்.

Comments