Tuesday, February 12, 2019

TYPE OF CONSTRUCTION TAMIL

construction 

                              கட்டுமானம்

  1. கட்டிடக் கட்டுமானம்
  2. கனரகக் கட்டுமானம்
  3. தொழிற்துறை கட்டுமானம்




 நவீன முறைகள்

கட்டிடக்கலை துறையில் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT), உள்ளார்ந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, ஆற்றல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் இயக்கம் மற்றும் மேலாண்மை நடவடிக்கை ஆகிய நிலைகளில் தானியங்கி கட்டுமான தொழில்நுட்ப முறைகள் உலகளாவிய அளவில் பரவலான பயன்பாட்டில் இருந்து வருவது அறியப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டு பிரிவுகள் ஆகியவற்றில் கட்டிடக்கலை நிபுணர்களின் அவசியம் அதிகரித்து வருகிறது

‘அக்ரிடெக்சர்’ தொழில்நுட்பம்

ஆர்க்கிடெக்சர் மற்றும் அக்ரிகல்சர் ஆகிய இரு வெவ்வேறு துறைகள் ஒன்றிணைந்த புதிய அணுகுமுறையாக அக்ரிடெக்சர் (Agritecture) உள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுடன் மரம், செடி மற்றும் கொடிகள் வளர்ப்பு முறைகளுக்கு ஒருங்கிணைந்த திட்டமாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில் பசுமை கட்டமைப்புகள் அமைப்பதற்கு ஏற்ற சாத்தியக்கூறாகவும் இந்த முறை நிபுணர்களால் கவனிக்கப்படுகிறது. குறைந்த இடப்பரப்புகளில் தோட்டம் மற்றும் உணவுப்பயிர் சாகுபடிக்கு இந்த முறை வழிகாட்டுகிறது. செங்குத்து தோட்டம் (Vertical Garden) மற்றும் ‘வேஸ்ட் வாட்டர் மேனேஜ்மெண்டு’ ஆகியவற்றில் இந்த முறையை பயன்படுத்தி பல நன்மைகளை பெற இயலும்.

Thursday, February 7, 2019

PUBG GAME



PUBG விளையாடியதால் மனநலம் பாதிப்பு
PUBG என்ற பிரபலமான மொபைல் கேம் அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் இடம்பிடித்திருக்கிறது. இதை அதிக நேரம் விளையாடுவதால் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உண்டு. அதுபோல பப்ஜி விளையாடிய ஒருவரின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்ட சம்பவம் ஜம்முவில் நிகழ்ந்துள்ளது.
ஜம்முவில் PUBG மொபைல் பிளேயர், ஓய்வு இல்லாமல் 10 நாட்கள் விளையாடிய நபர் மனநலப்பாதிப்பால் மருத்துவமனையில் 
ஜம்முவை சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் கடந்த 10 நாள்களுக்கு முன்னால் அவரது ஸ்மார்ட்போனில் PUBG-யை இன்ஸ்டால் செய்து விளையாடத் தொடங்கியிருக்கிறார். முதல் முறையே அவருக்கு மிகவும் பிடித்து விடவே ஆர்வத்தில் தொடர்ந்து விளையாட ஆரம்பித்திருக்கிறார். அப்படிக் கடந்த பத்து நாள்களும் ஓய்வே இல்லாமல் விளையாடியதால் அவரது மனநிலை சமநிலையை இழந்திருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் அவர் தன்னைத் தானே கடுமையாகத் தாக்கிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். 
அதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ``அவர் தற்பொழுது நிலையற்றவராக இருக்கிறார், அவரது மனம் சமநிலையை ஓரளவுக்கு இழந்திருக்கிறது " எனப் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இயல்பான நிலைக்குத் திரும்ப சில நாள்கள் ஆகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

Sunday, February 3, 2019

Computer virus

 COMPUTER VIRUS   பாதிப்பும்


கணினி நச்சுநிரல் (computer virus, கணினி வைரஸ்) கணினி பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பயனரின் அனுமதியின்றி தானாகவே நகலெடுக்கும் இயங்கிகளையும் ஏனைய கோப்புக்களையும் பாதிக்கும் ஒரு நிரலாகும். இவை கணினி வலையமைப்பூடாகவும் (இணையம் மற்றும் அகக்கணினி வலையமைப்பு) காவிச்செல்லக்கூடியசேமிப்பு ஊடகங்கள் போன்றவற்றாலும் பரவுகின்றது.

மனித மூளையின் வெற்றி நிறைந்த உருவாக்கப் படைப்புகளில் கணினியும் ஒன்றாகும். கணினியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளியும் கணினி நச்சுநிரல்களைப் (Computer Virus)) பற்றி அறியாமல் இருக்க முடியாது. 
கணினி நச்சுநிரல் என்பது மனிதனால் உருவாக்கப்படும் மென்பொருளாகும்.
 இவை சாதாரணமாக இயங்கிக் கொண்டிருக்கும் கணினியின் செயற்பாடுகளில் இடையூறு விளைவித்துக் கணினியின் செயற்பாட்டினை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கக்கூடிய நிகழ்வாகும்.
 அதாவது கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் செயற்பாடுகளுக்குத் தடங்கலாக அமைகின்ற விடயங்களில் கணினி நச்சுநிரல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 


கணினி பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் பயனாளர்களின் அனுமதியின்றி தானாகவே நகலெடுக்கும் இயங்கிகளையும், ஏனைய கோப்புகளையும் பாதிக்கும் ஒரு செயற்பாடாகக் கணினி நச்சுநிரல் விளங்குகிறது. 
இன்றைய உலகில் கணினி நச்சுநிரல்கள் 

  • வேடிக்கை, 
  • பொழுதுபோக்கு,
  •  சுயலாபம்,
  •  அரசியல்,
  •  போட்டி நிறுவனங்களை வீழ்த்துதல்,
  •  Anti-Virusகளை விற்பனை செய்தல்,
  •  புதுமையினை நிகழ்த்துதல்

  முதலிய காரணங்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகிறது. உலகளாவிய வலையமைப்பு, மின்னஞ்சல், கோப்புக்களைப் பகிரும் வலையமைப்புகளுக்கு ஊடாக ஒரு கணினியில் இருந்து பல்வேறு ஊடகங்கள் வழியாகத் தொடர்சங்கிலியால் கணினி நச்சுநிரல்கள் பரிமாற்றம் அடைகின்றன.

MALWARE 

மால்வேர் (MALWARE) என்பது MALICIOUS SOFTWARE என்ற சொற்களின் சுருக்கமாகும். இது தீங்கு விளைவிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது. இதனுள்ளே  கணினி நச்சு நிரல்களையும் (கணினி வைரஸ்)  உள்ளடக்கலாம்.   கணினி நச்சு நிரல்களின் செயற்பாடுகளுக்கு ஏற்ப
  1.  COMPUTER WARM,
  2.  RAAN SOMEWARE, 
  3. TROJAN HORSE,
  4.  BROWSER HIJACKER,
  5.  BACKDOOR  SANTA,
  6.   ROOT KIT, 
  7.   SPYWARE,
  8.  BLENDED THREAT,
  9.  ADWARE COOKIES,
  10.   KEYLOGGERS,
  11.  WORM,
  12.  MALICIOUS MOBILE CODE,
  13.   BROWSER HELPER OBJECT,
   என வகைப்படுத்தலாம்.

  1.COMPUTER WARM
 இக்கணினி நச்சு நிரல் இணையம் வழியாகப் பரவிப் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. கணினிப் பயனாளர்கள் இயக்காமலே தாமாகவே இயங்கும் தன்மையைக் கொண்டதாக விளங்கும் Warm Malware   நான்கு பிரிவுகளைக் கொண்டது. Penetration Tool எனும் பிரிவு கணினியில் பயன்படுத்தப்படும் Programmeகள் ஊடாகப் பலமற்ற இடத்தினூடாக இலகுவாக நுழைந்து செயற்பாடுகளை மேற்கொள்ளும். Installer எனும் அடுத்த பிரிவு Computerஇல் Warm நுழைந்தவுடன் கெடுதல் விளைவிக்கும் Malware பிரிவினை வேகமாக கணினியில் பதிக்கின்றது. ஈமெயில் முகவரிகள், இணையம் மூலம் மேற்கொள்ளுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் இப்பிரிவினுள் அடங்கும். Scanner எனும் அடுத்த பிரிவு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கணினிகளின் Warm programmeஇன் நோக்கத்தைச் செயற்படுத்த உதவும். இது பாதிக்கப்பட்ட கணினிகளில் இருந்து கொண்டே பல்வேறு வகைகளிலும் கெடுதல்களை ஏற்படுத்துகிறது. இந்த வகை Warmகள் இன்றைய உலகில் அதிகமாக உள்ளன.

 2.RAAN SOMEWARE
 கணினிகளில் உள்ள கோப்புக்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதனை மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் மாற்றியமைத்து தான் கேட்கும் தொகையினைச் செலுத்தும் வரை கணினியில் உள்ள கோப்புக்களைப் பூட்டி (Encrypt)) வைத்துக்கொள்ளும் தீங்கான வைரஸ் இதுவாகும். இந்த மென்பொருள் மின்னஞ்சல்களில் வரும் இணைப்புகள், இணைப்புக் கோப்புக்களுடன் மறைமுகமாக இருக்கும். அதனைப் பதிவிறக்கும் கணினியினை இது பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

உதாரணம்: 
  • அலுவலக கோப்புக்கள் : PPt, .doc, .docx, .xlsx, .sxi
  • நாடுகளில் பயன்படுத்தப்படும் கோப்புக்கள்  : .sxw, .odt, .hwp
  • காப்பகம், வீடியோக் கோப்புக்கள் : .zip, .rar, .tar, .bz2
  • ஈமெயில் தரவு கோப்புகள்  : .eml, .msg, .ost
  • தகவல் தரவுக் கோப்புகள் :  .sql, .accdb, .mdb
3.TROJAN HORSE: தீங்கு பயக்கும் மென்பொருளாகிய இது பயனாளர்கள் அறியாமலேயே கணினித் தொகுதியுடன் தொடர்புபடுகின்றது. அதாவது தேவையற்ற விதத்தில் திறக்கும் கணினி சாளரங்களையும் மாற்றும் மேசைத் தளங்களையும் (Desktop) ஏற்படுத்திக் கொண்டு, பதிவேடுகளை அழித்துக் கொண்டும் பயனாளர்களை அசௌகரியத்திற்கு உட்படுத்துகிறது. மேலும் இது ஏனைய தீங்கு பயக்கும் மென்பொருட்கள் கணினிக்குள் உள்நுழைவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும் மின்னஞ்சலைத் திறப்பதன் மூலம் இணையத்தினூடாக பதிவிறக்கம் செய்யப்படும் கோப்புக்களுடன் கணினியின் உள்நுழையும் TROJAN HORSE  கணினி நச்சு நிரல்கள்  Warm போன்று பரவுவதில்லை. ஆனாலும்  இவை கணினியை ஒரு ஹேக்கர், தொலைநிலை அணுகல் மூலம் (Remote Access) கட்டுப்படுத்தக் கூடியதாகவும் மாற்றுகிறது.

5.BACKDOOR SANTA: கணினிப் பயனாளர்களை ஏமாற்றி அவர்கள் பயன்படுத்தும் programmeகளை அவர்களின் அனுமதியுடன் Install செய்து கணினியின் செயற்பாட்டை முடக்குவது இந்நச்சுநிரலின் நோக்கமாகும். இணையத்தில் கிடைக்கும் நிகழ்ச்சிநிரல்களின் பயன்களை விரும்பி அதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றபோது பயனாளர்களை அறியாமலே கணினியின் பயன்பாடு, இணைய தளங்கள், இணையத்தளத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களை இந்நச்சுநிரல்  திருடும் தன்மையுடையதாக விளங்குகிறது. உதாரணம் ALEXA, HOTBAR


6.ROOT KIT: கணினியில் மறைந்திருந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் ஒருவகையான நச்சுநிரல் இதுவாகும். Rootkit நச்சு நிரலைக் கணினியில் நிறுவுவதனால் கணினியின் முழுக்கட்டுப்பாட்டையும் இது தம்வசம் வைத்துக் கொள்வதோடு கணினியில் உள்ள தகவல்கள், கடவுச்சீட்டு இலக்கங்கள், விபரங்கள், வங்கிக் கணக்கு விபரங்கள் என்றவாறு அனைத்தையும் களவாடும் தன்மையுடையதாகவும் விளங்குகிறது.  அத்துடன் நச்சுநிரல் இயங்கு முறையின் அடித்தளத்தில் இயங்குவதால் இதனைக் கண்டறிவது, அழிப்பது என்பது கடினமான செயல். ஆனாலும் சில கேர்ணல் அமைப்பில் இயங்கும் Root kit  நச்சுநிரலை அழிக்கலாம். இதிலிருந்து மீண்டும் இயங்கு முறையை நிறுவிக் கொள்ளலாம். இதனைக் கண்டறிவதற்குப் பல programmeகளை Antivirus நிறுவனங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



 7.SPYWARE: இணையம் மூலமாகக் கணினியை வந்தடையும் இந்த நச்சுநிரலின் நோக்கம் கணினியில் இருந்து தகவல்களைத் திருடுவதாகும்.  அதாவது இரகசிய இலக்கங்கள், வங்கித் தகவல்கள் போன்றவை இந்த வைரஸ் மூலம் திருடப்படுகிறது. மேலும் இணையத்தளங்களின் முகவரிகள், புகைப்படங்கள், கணினியில் நாம் மேற்கொள்ளுகின்ற செயற்பாடுகள், மடிக்கணினியின் புகைப்படக்கருவி போன்றவற்றைச்  சுயாதீனமாக இயக்கம் செய்து அதிலிருக்கும் தகவல்களையும், வீடியோ காட்சிகளையும் இந்த நச்சுநிரல் திருடுவதன் மூலம் பாரிய பாதிப்புக்களைக் கணினிப் பயனாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.
     8.BLENED THREAT: கணினியில் Install செய்யப்பட்ட Programmeஇன் பலவீனமான இடத்தின் வழியாக உள்நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நச்சு நிரல் மின்னஞ்சல் வழியே வைரஸை பரப்பும் தன்மையுடையது. இதுவே  கணினிகளில் வேகமாகப் வைரஸ்களை  பரப்பிவிடும். கணினியில் இந்த நச்சு நிரல் ஏற்படுத்தும்  விளைவு பாரதூரமானதாகும்.
     9.ADWARE COOKIES:  இணைய தளங்களினூடாக கணினியில் பதியப்படும் சிறிய கோப்பு நச்சுநிரல் இதுவாகும். கணினியில் குறித்த தகவல்களை இணைய தளத்தில் அனுப்புவதற்காகப்  பதியப்படுபவையாகும்.  சில இணையத்தளங்கள் இதனை Adware Tracking Cookiesஇல் பதித்துவிடும். பின்னர் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்கள் முதலியவைகளை  அவர்களுக்கு அனுப்பும். இதனால் கணினியின் செயல்பாடு  மந்தநிலையை அடையும்.
     10.KEYLOGGERS: கணினியில் – விசைப்பலகையில் அழுத்தும் போது அவை எந்த விசைகள் என்று ஏனையவர்களுக்குத் தெரியப்படுத்துதல் இதன் நோக்கமாகும். குழந்தைகள் கணினியில் என்ன வகை மென்பொருட்களை இயக்குகிறார்கள், எந்தத் தளங்களுக்குச் செல்கிறார்கள் என்பதனைக் கண்டறிய இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள் கணினியில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் இந்த நச்சுநிரல் பயன்படுத்தப்படுகின்றது.
     11.WORM: இந்தக் கணினி நச்சுநிரல் ஒரு நிகழ்ச்சி நிரலைப் பிரதி செய்யும்போது அதே பெயரில் மற்றொரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கும் தன்மையுடையது. இந்த இரண்டு நிகழ்ச்சி நிரல்களின் அளவும் ஒரே அளவாகக் காட்டப்படும். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி நிரலை அழிக்க நினைத்து  நாம் முயலும் போது  அது ஏனைய நிகழ்ச்சி நிரல்களையும் அழித்துவிடும். இதனால் இரண்டு நிகழ்ச்சி நிரல்களும்  இதிலிருந்து முற்றாக  அழிக்கப்பட்டுவிடும்.
     12.MALICIOUS MOBILE CODE: Malware Programmeஐ கணினியில் பதிய வைக்கும் நோக்குடன் இந்தக் கணினி நச்சுநிரல் பயன்படுத்தப்படுகிறது. இணையத்தினூடாக கணினிகளுக்குள் உள்நுழைந்து Install செய்யப்பட்ட பின்னர் தனது செயற்பாடுகளினை இது தொடங்கி, கணினிப்  பயனாளர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
     13.BROWSER HELPER OBJECT: கணினிப் பயனாளர்கள் கணினியின் உலாவிகளுக்குள் நுழைந்ததும் (Browsers) இந்த நச்சுநிரல் இயங்கத் தொடங்கும். இது இணையப் பயனாளர்களைத் திசைதிருப்பிப் பாலியல் வலைத்தளங்களுக்குக் கொண்டு செல்வதோடு, கணினி மெதுவாக இயங்குவதற்கும் காரணமாகிறது.
     14.DIALERS: கணினிப் பயனாளர்களின் அனுமதியின்றி Modem மூலமாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம் சில பாலியல் இணையத் தளங்களுக்குக் கொண்டு செல்லும் தன்மையுடையது. தொலைபேசி வழியாக இணைய இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் பாரியளவில் தாக்கங்கள் ஏற்படுகின்றது.

 கணினி நச்சுநிரல்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்
மனித மூளையின் பல்லாயிரக்கணக்கான நுண்ணறிவின் தொகுதியாகக் கட்டியெழுப்பப்பட்ட கணினி எனும் சாதனத்தை நம்பி மனிதர்கள் வாழ்கின்றனர். மனிதன் பொய்யுரைத்தாலும் கணினி பொய்யுரைக்காது என்று உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் கணினி நச்சுநிரல்களினால் (கணினி வைரஸ்கள்)  ஏற்படும் எதிர்பாராத தாக்கங்கள் மனிதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிலைதடுமாற வைக்கின்றன. கணினியில் வைரஸ் தாக்கத்தினால் நிகழுகின்ற பிரச்சினைகள் தொடர்நிலையில் பல்வேறு வழிகளிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன. அலுவலகப் பணியாளர்கள் தொடங்கிப் புகைப்படக் கலைஞர்கள் வரை கணினியை உபயோகிக்கும் ஒவ்வொரு நபர்களும் கணினி வைரசின் தாக்கத்தினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கணினி நச்சுநிரல்கள் கணினியில் இருந்து ஒருவரினுடைய பிரத்தியேகமான தரவுகளைக் களவாடக்கூடிய வகையில்  வடிவமைக்கப்படுகின்றன. இதனால் கணினிப் பயனாளர்களுக்குத் தெரியாமல் கணினித் தொகுதிக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வங்கிக் கணக்கு இலக்கங்கள், கடன் அட்டை இலக்கங்கள், இரகசிய இலக்கங்கள், கணினி செய்நிரல்களை அழித்தல், செயற்றிட்ட கோப்புக்கள்,  சான்றிதழ்கள், தகவல் தரவுக் கோப்புக்கள்  என்றவாறாக கணினியில் சேமித்து வைத்திருக்கின்ற அனைத்து விடயங்களையும் திருடுதல், அழித்தல் முதலிய செயற்பாடுகளைக் கணினி வைரஸ்கள் ஏற்படுத்திவருகின்றன.
இணையப் பயனாளர்களின் இணையப் பயன்பாட்டைப் பாதிக்கும் வகையில் வைரஸ் மூலம் சமூக வலைத்தளங்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. Facebook Application, Facebook Invitation முதலியனவற்றினூடாக வைரஸ்கள் கணினியை வந்தடைகின்றன. இந்தக் குறுக்கீடுகள் கணினியை (Re-Start) மீள்இயக்கும் வகையில் செயற்பட வைக்கின்றது.
கணினியில் நச்சுநிரல்கள் அனுமதியின்றி  உள்நுழைந்து இரகசியமான முறையில் ஒருவரின் சுயவிருப்பின்றித் தகவல்களைக் களவாடுதல், அழித்தல் முதலான செயற்பாடுகளால்  கணினிப் பயனாளர்கள்  உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கு உட்படுகின்றனர். இதனால் கணினி வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நபர் கணினியைத் தன்னால் சரிவர இயக்க முடியாது என்ற மனநிலைக்கு ஆளாகின்றனர்.
கணினிப் பயனாளர்கள் கணினியினைப் பயன்படுத்தும்போது தமது வேலை தொடர்பில் ஒழுங்காக செயற்பட முடிந்தாலும் கணினி வைரஸ் தாக்கியதன் பின்னர் அதிலிருந்து மீள்வது என்பது தொடர்பில் தனது அடுத்தகட்ட செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவு அவர்களிடத்தில் காணப்படாதபோது தனது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்கள் பிறிதொரு நபருடைய உதவியை நாடவேண்டிய தேவை உருவாகும்.  இல்லாவிடின் பணத்தினை விரயம் செய்ய வேண்டி வரும். பொருளாதார ரீதியில் ஒரு நபரிடத்தில் மந்தநிலை ஏற்பட்டால் தனது பிரச்சினையை உடனடியாகச் சரிசெய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் கணினியில் ஏற்பட்ட பிரச்சினையைச் சரிசெய்வது தொடர்பாக  அவர் சிந்தித்துக் கொள்ளுவார். இதனால் தனது முக்கியமான வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களால் சரிவரச் செய்ய முடியாத நிலை ஏற்படும்.  இதனால் கணினி சார்ந்த முக்கியமான வேலைகளில் தாமதங்கள் ஏற்படும்.
கல்வி கற்கும் மாணவர்களின் கல்விசார் செயற்பாடுகளுக்குக் கணினி வைரஸ்களால் தடை ஏற்படுகிறது.  குறிப்பிட்ட, காலத்தில் அவர்களால் தங்களது செயற்றிட்டங்களைச் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் மாணவர்கள் கணினி வைரஸ்களைத் தவறான வலைத்தளங்களுக்குக் கொண்டு செல்வதனால் துஸ்பிரயோக, நாசகாரிய செயல்களில் ஈடுபடக் கூடியவராகவும் மாறுகின்றனர். இதனால் மாணவர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகப் போகும் நிலையும் உருவாகலாம். அத்துடன் போட்டி அடிப்படையில் தகவல்கள் திருடப்பட்டு அழிக்கப்படுவதனால் போட்டி நிறுவனங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகும். இதனால் பல்வேறு வழிகளிலும்  மேலும் பிரச்சினைகள் வளரத் தொடங்கி, பாரிய தீங்கு விளைவுகளைப் பொருளாதாரத்திலும்  ஏற்படுத்தும்.
அரசியல் துறையில் பல்வேறு சிக்கல் நிலைகளைக் கணினி வைரஸ்  உருவாக்குகிறது. போட்டி நாடுகள் தங்களை முதன்மைப்படுத்தும் நோக்கில் எதிரி நாடுகளுக்குக் கணினி வைரஸ்களை அனுப்பித் தாக்குதல்களை மேற்கொள்ளுகிறது. இதனால்  குறிப்பிட்ட நாட்டின் மக்கள் பல்வேறு ரீதியிலும் பாதிக்கப்படுகின்றனர். கணினி நச்சுநிரல்களால் கணினிகள் சீராக தொழிற்படாமையினால் கணினிசார் விற்பனையும் பாதிக்கப்படுகிறது. இதனால் கணினி சார்ந்த உற்பத்தியாளர்களது படைப்புக்களின் உண்மைத் தன்மைக்கு தக்க வரவேற்புக் கிடைக்காமல் போகும் நிலையும் உருவாகலாம். இவ்வாறான பல்வேறுபட்ட பாதிப்புக்களைக் கணினி நச்சுநிரல்கள் ஏற்படுத்துகின்றன.

  • சாதாரண பயன்பாட்டிற்காகக் கணினி நிர்வகிக்கும் கணக்கிற்குப் (Administrator Account) பதிலாகச் சாதாரண பயனர் கணக்கைப் (User Account) பயன்படுத்தல்
  • Microsoft பாதுகாப்பு அறிவிப்பு பரிந்துரைத்த Ms17-010 வின்டோஸ் கணினிகளுக்கான இணைப்புக்களைப் பயன்படுத்துதல்
  • கணினியின் பாதுகாப்புக் கருதி  (Antivirus)) மென்பொருளை நிறுவுதல்
  • சட்டரீதியான மென்பொருளைக் கணினியில் நிறுவுதல்
  • USB நினைவகங்களைக் கணினியுடன் தொடுக்கும் தொடர்பில் கவனம் செலுத்துதல்
  • இணையப் பயன்பாட்டின்போது பாதுகாப்பான வலைத்தளங்களைப் பயன்படுத்தல்
  • பதிவிறக்கங்களை மேற்கொள்ளும்போது கவனமாக இருத்தல்
  • மின்னஞ்சல் அமைப்புக்களைச் சரிபார்க்கும் அமைப்புக்களை நிறுவுதல்
  • மின்னஞ்சலில் அனுப்பப்படும் சந்தேகத்திற்கு இடமான கோப்புக்களைத் திறக்காதிருத்தல்.
  • பிற வெளித்தேக்கங்களில் முக்கியமான தகவலைச் சேகரித்து வைத்தல்
  • பிறரிடம் இருந்து வாங்கிப் பயன்படுத்தும் Floppy Disk, CD போன்றவைகளை முறையாகச் சோதித்த பின்னரே உபயோகித்தல்


திரவியராசா நிரஞ்சினி
உதவி விரிவுரையாளர்

வினாயகமூர்த்தி – வசந்தா
கலைமாணி மாணவி, பொருளியல் துறை
Dr த.சத்தியராஜ்
Tamil Nadu, India.

Monday, January 28, 2019

Type of the hackers

ஹெகிங் என்றால் ஒரு நபர் அனுமதி இல்லாத கணினியில் நுழைந்து அவரது தகவல்களை திருடி தனக்கு சாதகமாய் பயன்படுத்துபவர்.Hacking தீய முறையில் பயன்படுத்துபவர்கள் Black Hat hackers  என்றும் நல்ல முறையில் பயன்படுத்துவது White Hat Hackers என்றும்  அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தான் இன்றைக்கு மவுசு..


சென்ற வருடம் இலங்கை கண்டி பகுதியை சேர்ந்த Gayan Roshantha Silva என்ற பாடசாலை மாணவர் ஒருவர் marusiraDOTcom என்ற Hacking forum ஒன்றை உருவாக்கி ஏனைய சிறிய Black Hat Hackers உடன் சேர்ந்து பொது இணையத்தளங்களை அவர்கள் வசம் கொண்டுவந்ததற்காகவும், Hacking மென்பொருட்களை விற்பனை செய்ததற்காகவும்  CID மூலம் சிறைபிடிக்கப்பட்டார். 






 "கெட்டது" White என்றால் "நல்லது" என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

Friday, January 25, 2019

The dark web



இணையத்தின் மறுபக்கம் THE DARK WEB (TOR NETWORK)


டார்க் வெப் என்றால் என்ன?
நாம் இணையத்தின் ஒரு பகுதியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். இதனை மேற்பரப்பு இணையம் என்கிறோம். அதற்கு கீழ், ஆழமான இணைய பரப்பு ஒன்று இருக்கிறது. அதன் ஒரு பகுதி இருள் நிறைந்தது. அனைத்து சட்டவிரோத காரியங்களும் அங்குதான் நிகழ்கிறது.
இந்த இணைய பரப்பை நாம் வழக்கமான தேடல் தளத்தில் கண்டுபிடிக்க முடியாது.
டார்க் வெப் என்று அழைக்கப்படும் இதில், ஆயிரகணக்கான இணையதள பக்கங்கள் உள்ளன. இங்குதான் மொத்த கள்ளசந்தையும் இயங்குகின்றன.
இதில் எத்தனை விற்பனையாளர்கள் இயங்குகிறார்கள்...எத்தனை முகவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம்.

டார்க் வெப்
சுதிர் ஹிராய்மத், காவல்துறை இணை ஆணையர் (பூனே சைபர் செல்) "அதில் எவ்வளவு வணிகம் நடைப்பெறுகிறது என்று கண்டுப்பிடிப்பது மிகவும் கடினம். ஆனால், ஒரு முறை டார்க் வெப் கள்ளசந்தையில் தோராயமாக எவ்வளவு வணிகம் நடைபெறுகிறது என்ற தகவலை எஃப்.பி.ஐ வெளியிட்டது. அதில் நடைபெறும் மொத்த வணிகம் 1200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்" என்கிறார்.
'பட்டு சாலை' இணையதளம்தான் கள்ளசந்தைக்கு பிரசித்திப்பெற்றது. இது 2013 ஆம் ஆண்டு எஃப்.பி.ஐ- ஆல் மூடப்பட்டது.

டார்க் வெப் எப்போது தொடங்கப்பட்டது?
கள்ளசந்தைக்காகவெல்லாம் `டார்க் வெப்` தொடங்கப்படவில்லை. இது தொடங்கப்பட்டது 1990 ஆம் ஆண்டு. தொடங்கியவர்கள் அமெரிக்க ராணுவத்தினர். ரகசிய தகவல்களை பாதுகாப்பாக அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளதான் இதனை தொடங்கினார்கள்.
ஆனால், இப்போது அது வேறுகாரணங்களுக்காகதான் பயன்படுத்தப்படுகிறது.
இந்த டார்க் வெப் மூலமாக, நாம் இப்போது சயனைட் மற்றும் ஆபத்தான போதை பொருட்களை வீட்டிலிருந்தப்படியே பெறலாம்.
காவல்துறை இணை ஆணையர், சுதிர் ஹிராய்மத், "இந்த டார்க் வெப் மூலமாக ஆயுதங்கள் பெற முடிகிறது. ஏன் பணத்திற்காக கொலை செய்யும் கொலைகாரர்களை கூட தொடர்பு கொள்ள முடிகிறது" என்கிறார்.
இந்தியாவில் இது பெரும்பாலும் போதை பொருள், குழந்தைகள் தொடர்புடைய பாலியல் விஷயங்களுக்காகதான் இந்த டார்க் வெப் பயன்படுகிறது என்கிறார்.
சட்டங்கள் நாட்டிற்கு நாடு வேறுப்படுகிறது. அதனால், அறமற்ற இந்த தொழிலின் போக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.
ஏமாற்றுகாரர்களும் இந்த `டார்க் வெப்` -ஐ பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், அவர்கள் இதன் மூலமாக போலி பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்... இன்னப்பிற அடையாள அட்டைகளையும் பெற முடிகிறது.
இது அனைத்தையும் கடந்து, நாம் டார்க் வெப் மூலம் `ஹேக்கர்ஸ்`- உடன் கூட தொடர்பு கொள்ள முடிகிறது.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு இந்த டார்க் வெப் மூலம் நிதி திரட்டியதாகவும் கூறப்படுகிறது.
கண்காணிப்பது கடினம்
வெங்காயத்தில் எப்படி பல அடுக்குகள் இருக்குமோ... அது போல பல அடுக்குகள் கொண்ட உலாவிகள் (பிரவுசர்ஸ்) உள்ளது என்கிறார் சுதிர் ஹிராய்மத்.
இது குறித்து விவரிக்கும் அவர், "சாதாரண உலாவிகள் மற்றும் தேடு தளங்களை கண்காணிக்க முடியும். கூகுள் நம்மை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், டார்க் வெப்பை கண்காணிப்பது கடினம். சில மென்பொருட்களை பயன்படுத்தி, கணிணி ஐ.பி முகவரியை மறைத்துவிடுகிறார்கள். அதனால் யார் இதனை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுப்பிடிப்பது கடினம்." என்கிறார்.
இதனால், இதில் நடைப்பெறும் சட்டவிரோத சம்பவங்களை கண்காணிப்பது, அதில் ஈடுப்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது
பிட்காயினில் கட்டணம்
`டார்க் வெப்`உம் டிஜிட்டல் சந்தை போலதான். ஆனால், இரண்டுக்கும் உள்ள ஒரே விஷயம் டார்க் வெப் சட்டவிரோதமானது. அதில் விற்பதும், வாங்குவதும் குற்றச்செயல்.
அமேசான், ஃப்ளிப்கார்ட் போல, வாடிக்கையார்களை ஈர்க்க டார்க் வெப் இணைய விற்பனை சந்தையிலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இதுமட்டுமல்லாமல், பிற வாடிக்கையாளர்களுடன் நாம் உரையாடும் வாய்ப்பையும் இது ஏற்படுத்தி தருகிறது.
இதில் கட்டணத்தை பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி மூலமாக செலுத்தலாம்.
கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை கண்காணிப்பது கடினம். அதனால், முறைகேடான விஷயங்களுக்கு அதில் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

Tuesday, January 22, 2019

What is the cyber crime

சைபர் க்ரைம் 

AM. Jumail


  • இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.


  • குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

  • 5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.
  • 6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள். 
  • 7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.
  • 8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.
  • 9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.
  • 10. குழந்தைகள், பெண்கள்  புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
  • 11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
  • 12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.  
  • 13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.


பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு 

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் 

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].   

4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் 

5. கடன் அட்டை எண் திருட்டு

6. வலைத்தள ஹேக்கிங்


புகார்  கொடுக்க:  http://www.telligp.police.lk

fire safety

Introduction to fire safety Most fires are preventable. Those responsible for workplaces and other buildings to which the public have access...