Monday, January 28, 2019

Type of the hackers

ஹெகிங் என்றால் ஒரு நபர் அனுமதி இல்லாத கணினியில் நுழைந்து அவரது தகவல்களை திருடி தனக்கு சாதகமாய் பயன்படுத்துபவர்.Hacking தீய முறையில் பயன்படுத்துபவர்கள் Black Hat hackers  என்றும் நல்ல முறையில் பயன்படுத்துவது White Hat Hackers என்றும்  அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தான் இன்றைக்கு மவுசு..


சென்ற வருடம் இலங்கை கண்டி பகுதியை சேர்ந்த Gayan Roshantha Silva என்ற பாடசாலை மாணவர் ஒருவர் marusiraDOTcom என்ற Hacking forum ஒன்றை உருவாக்கி ஏனைய சிறிய Black Hat Hackers உடன் சேர்ந்து பொது இணையத்தளங்களை அவர்கள் வசம் கொண்டுவந்ததற்காகவும், Hacking மென்பொருட்களை விற்பனை செய்ததற்காகவும்  CID மூலம் சிறைபிடிக்கப்பட்டார். 






 "கெட்டது" White என்றால் "நல்லது" என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

Friday, January 25, 2019

The dark web



இணையத்தின் மறுபக்கம் THE DARK WEB (TOR NETWORK)


டார்க் வெப் என்றால் என்ன?
நாம் இணையத்தின் ஒரு பகுதியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். இதனை மேற்பரப்பு இணையம் என்கிறோம். அதற்கு கீழ், ஆழமான இணைய பரப்பு ஒன்று இருக்கிறது. அதன் ஒரு பகுதி இருள் நிறைந்தது. அனைத்து சட்டவிரோத காரியங்களும் அங்குதான் நிகழ்கிறது.
இந்த இணைய பரப்பை நாம் வழக்கமான தேடல் தளத்தில் கண்டுபிடிக்க முடியாது.
டார்க் வெப் என்று அழைக்கப்படும் இதில், ஆயிரகணக்கான இணையதள பக்கங்கள் உள்ளன. இங்குதான் மொத்த கள்ளசந்தையும் இயங்குகின்றன.
இதில் எத்தனை விற்பனையாளர்கள் இயங்குகிறார்கள்...எத்தனை முகவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம்.

டார்க் வெப்
சுதிர் ஹிராய்மத், காவல்துறை இணை ஆணையர் (பூனே சைபர் செல்) "அதில் எவ்வளவு வணிகம் நடைப்பெறுகிறது என்று கண்டுப்பிடிப்பது மிகவும் கடினம். ஆனால், ஒரு முறை டார்க் வெப் கள்ளசந்தையில் தோராயமாக எவ்வளவு வணிகம் நடைபெறுகிறது என்ற தகவலை எஃப்.பி.ஐ வெளியிட்டது. அதில் நடைபெறும் மொத்த வணிகம் 1200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்" என்கிறார்.
'பட்டு சாலை' இணையதளம்தான் கள்ளசந்தைக்கு பிரசித்திப்பெற்றது. இது 2013 ஆம் ஆண்டு எஃப்.பி.ஐ- ஆல் மூடப்பட்டது.

டார்க் வெப் எப்போது தொடங்கப்பட்டது?
கள்ளசந்தைக்காகவெல்லாம் `டார்க் வெப்` தொடங்கப்படவில்லை. இது தொடங்கப்பட்டது 1990 ஆம் ஆண்டு. தொடங்கியவர்கள் அமெரிக்க ராணுவத்தினர். ரகசிய தகவல்களை பாதுகாப்பாக அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளதான் இதனை தொடங்கினார்கள்.
ஆனால், இப்போது அது வேறுகாரணங்களுக்காகதான் பயன்படுத்தப்படுகிறது.
இந்த டார்க் வெப் மூலமாக, நாம் இப்போது சயனைட் மற்றும் ஆபத்தான போதை பொருட்களை வீட்டிலிருந்தப்படியே பெறலாம்.
காவல்துறை இணை ஆணையர், சுதிர் ஹிராய்மத், "இந்த டார்க் வெப் மூலமாக ஆயுதங்கள் பெற முடிகிறது. ஏன் பணத்திற்காக கொலை செய்யும் கொலைகாரர்களை கூட தொடர்பு கொள்ள முடிகிறது" என்கிறார்.
இந்தியாவில் இது பெரும்பாலும் போதை பொருள், குழந்தைகள் தொடர்புடைய பாலியல் விஷயங்களுக்காகதான் இந்த டார்க் வெப் பயன்படுகிறது என்கிறார்.
சட்டங்கள் நாட்டிற்கு நாடு வேறுப்படுகிறது. அதனால், அறமற்ற இந்த தொழிலின் போக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.
ஏமாற்றுகாரர்களும் இந்த `டார்க் வெப்` -ஐ பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், அவர்கள் இதன் மூலமாக போலி பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்... இன்னப்பிற அடையாள அட்டைகளையும் பெற முடிகிறது.
இது அனைத்தையும் கடந்து, நாம் டார்க் வெப் மூலம் `ஹேக்கர்ஸ்`- உடன் கூட தொடர்பு கொள்ள முடிகிறது.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு இந்த டார்க் வெப் மூலம் நிதி திரட்டியதாகவும் கூறப்படுகிறது.
கண்காணிப்பது கடினம்
வெங்காயத்தில் எப்படி பல அடுக்குகள் இருக்குமோ... அது போல பல அடுக்குகள் கொண்ட உலாவிகள் (பிரவுசர்ஸ்) உள்ளது என்கிறார் சுதிர் ஹிராய்மத்.
இது குறித்து விவரிக்கும் அவர், "சாதாரண உலாவிகள் மற்றும் தேடு தளங்களை கண்காணிக்க முடியும். கூகுள் நம்மை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், டார்க் வெப்பை கண்காணிப்பது கடினம். சில மென்பொருட்களை பயன்படுத்தி, கணிணி ஐ.பி முகவரியை மறைத்துவிடுகிறார்கள். அதனால் யார் இதனை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுப்பிடிப்பது கடினம்." என்கிறார்.
இதனால், இதில் நடைப்பெறும் சட்டவிரோத சம்பவங்களை கண்காணிப்பது, அதில் ஈடுப்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது
பிட்காயினில் கட்டணம்
`டார்க் வெப்`உம் டிஜிட்டல் சந்தை போலதான். ஆனால், இரண்டுக்கும் உள்ள ஒரே விஷயம் டார்க் வெப் சட்டவிரோதமானது. அதில் விற்பதும், வாங்குவதும் குற்றச்செயல்.
அமேசான், ஃப்ளிப்கார்ட் போல, வாடிக்கையார்களை ஈர்க்க டார்க் வெப் இணைய விற்பனை சந்தையிலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இதுமட்டுமல்லாமல், பிற வாடிக்கையாளர்களுடன் நாம் உரையாடும் வாய்ப்பையும் இது ஏற்படுத்தி தருகிறது.
இதில் கட்டணத்தை பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி மூலமாக செலுத்தலாம்.
கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை கண்காணிப்பது கடினம். அதனால், முறைகேடான விஷயங்களுக்கு அதில் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

Tuesday, January 22, 2019

What is the cyber crime

சைபர் க்ரைம் 

AM. Jumail


  • இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.


  • குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

  • 5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.
  • 6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள். 
  • 7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.
  • 8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.
  • 9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.
  • 10. குழந்தைகள், பெண்கள்  புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
  • 11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
  • 12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.  
  • 13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.


பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு 

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் 

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].   

4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் 

5. கடன் அட்டை எண் திருட்டு

6. வலைத்தள ஹேக்கிங்


புகார்  கொடுக்க:  http://www.telligp.police.lk

Saturday, January 19, 2019

What is the Technology

Technology can be the knowledge of techniques, processes, and the like, or it can be embedded in machines to allow for operation without detailed knowledge of their workings. The simplest form oftechnology is the development and use of basic tools.


தொழில் நுட்பம் என்பது, பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு. தொழினுட்பம் கருவிகள்கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துருஆகும். எனினும் ஒரு இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது. தொழினுட்பம் பொறிகள்வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆள்வதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கட்டுமானத் தொழினுட்பம்மருத்துவத் தொழினுட்பம் போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும்.

தகவல் தொழில்நுட்பம்

 (Information technology) என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும். இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும். தகவல் தொழில்நுட்பம் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஓர் உட்பிரிவாகும். சுப்போ என்பார் 2012 இல் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் படிநிலைகளை வரையறுத்தார். இந்தப் படிநிலைகளின் ஒவ்வொரு மட்டமும் ஓரளவு சில பொதுமைகளைக் கொண்டமைந்துள்ளன. இப்பொதுமைகள் "தகவல் பரிமாற்றத்தையும் மின்னணுவியலானத் தொடர்பாடல்களையும் உள்ளடக்கிய தொழிநுட்பங்களைச் சார்ந்திருந்தன.

இச்சொல் ஓரளவு கணினிகளையும் கணினி வலையமைப்பையும் குறித்தாலும், இதில் தகவலைப் பரப்பும் தொழில்நுட்பங்களாகிய தொலைக்காட்சியும் தொலைபேசிகளும் உள்ளடங்குவனவாகும். தகவல் தொழில்நுட்பத்தில் பல கணினித் தொழிலகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இத்தொழிலகங்களில் கணினி வன்பொருள்மென்பொருள்மின்னணுவியல்குறைகடத்திகள்இணையம்தொலைத்தொடர்புக் கருவிகள் (en:telecommunications equipment), மின்வணிகம் ஆகியன உள்ளடங்கும்

fire safety

Introduction to fire safety Most fires are preventable. Those responsible for workplaces and other buildings to which the public have access...